சித்தார்த் மற்றும் சமந்தா இடையிலான காதல் சில காலம் தமிழ் சினிமாவின் சூடான டாப்பிக்காக இருந்து வந்தது. ஆனால் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பாக இருவரும் அவர்களுக்குள்ளான உறவை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் சித்தார்த் அண்மையில் ட்விட்டரில் மேற்கொண்ட பதிவிற்கு சமந்தா தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.
தனது ஜில் ஜங் ஜக் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் சித்தார்த் அண்மையில் தனது ட்விட்டர் தளத்தில் தனது வாழ்வில் நடந்த மோசமான விடயம் உண்மையில் தனக்கு நடந்த சிறப்பான விடயம் என்பதை உணர்ந்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்க்கு பதிலடியாக சமந்தா தனது ட்விட்டர் வலைத்தளத்தில் "நீ வெறும் எனக்கு தெரிந்த நபர்களில் ஒருவன் மட்டுமே என்பதை நானும் உணர்கிறேன்" என்ற வகையில் பதிவிட்டிருக்கிறார்.
மேலும் அந்த பதிவை சொற்ப நேரத்திலேயே சமந்தா delete செய்து விட்டதாகவும் தெரிகிறது. ஆனாலும் அவரது பாலோவர்ஸ் அதனை மீள் பதிவிட்டு வருகிறார்கள்.
(டைம் பாஸ் போஸ்ட்)