Friday, January 17, 2014

விகடன் சினிமா விமர்சனம் - ஜில்லா

சினிமா விமர்சனம் - ஜில்லா



ரௌடி வளர்ப்பு மகன் போலீஸாக மாறி, ரௌடி அப்பாவைத் திருத்தினால்... அதுவே ஜில்லா!  
மோகன்லால் - விஜய் என மாஸ் ஆக்ஷன் மசாலா ட்ரீட் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் நேசன். மோகன்லாலைக் கொல்ல நடக்கும் முயற்சிகளைச் சொல்லிவிட்டு, பின்பாதியில் அத்தனை விஷயங்களையும் ஒன்றாகக் கோக்கும் இடத்தில் மட்டும் சுவாரஸ்யம். மற்றபடி பன்ச், பில்டப் என்று மசாலாவைக் 'காட்டு காட்டென்று’ காட்டியதில் கண்ணைக் கட்டுகிறது!
கம்பீர ரௌடி சிவனாக மோகன்லால்... அசத்தல்! நரை தாடி, அகல பாடி எனத் தோன்றும் ஃப்ரேம்களில் எல்லாம் வசீகரிக்கிறார். ஆனால், 'இந்தச் சிவனை...’, 'இந்தச் சிவனுக்கு...’ என ஆரம்பித்து மதுரையில் உட்கார்ந்துகொண்டு அவர் அடிக்கும் பன்ச்களில்... மலையாள வாடை தூக்கல்!
ஆக்ஷன் கதைக்கு விஜய்யின் எக்ஸ்பிரஷன் களும், பாடிலாங்குவேஜும் பக்கா. தீ விபத்தில் பலியான குழந்தைகளைப்  பார்த்துக் கலங்குவதும், அப்பா பாசத்தில் உருகுவதுமாக செம. ஆனால், ஒரு பக்கமாகச் சாய்ந்து சாய்ந்து நடக்கும் ஸ்டைல்... வேணாம் ப்ரோ!  
லேடி போலீஸ் காஜல் அகர்வால். கண்களைச் சுருக்கிக் கோபப்படுவதைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லை. சம்பத் கோபம், நக்கல், நையாண்டி, வெறி... என எல்லாம் கலந்துகட்டி அடிக்கிறார்.  செம சீரியஸ் கதையில் கொஞ்சம் சிரிப்பு மாவு பிசைவது 'பரோட்டா’ சூரிதான். ''என்னாது 'சாந்தி’ங்கிறது மாடர்ன் பேரா..? காந்தி காலத்திலேயே தடை பண்ணின பேருடா அது...'' என்று விஜய் காதலுக்கு லந்து கொடுக்கும் இடங்களில் கிச்சுக்கிச்சு!
மிரட்டல் அப்பா - அவரது ப்ளஸ் மைனஸ் எல்லாம் அறிந்த செம ஷார்ப் மகன்... இவர்களுக்கு இடையிலான மோதல் தூள் கிளப்ப வேண்டாமா? ஆனால், ஏதோ செல்லச் சண்டை போட்டுக்கொள்வது போல, 'திருந்து - திருந்த முடியாது’ என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஜாலி கேலி முன்பாதி ரசிக்கவைத்தாலும் இரண்டாம் பாதியில் அவ்வளவு நீள ஃப்ளாஷ்பேக்குகள்... சலிப்பு. 'நாம ரௌடியா இருக்கோம்...போலீஸாவும் இருந்தா என்ன?’ என்ற எண்ணமும், திருந்திய விஜய்க்கு சீனியர் பதவி உயர்வு வழங்கும் இடமும்... ப்பா£.!
இமான் இசையில் 'கண்டாங்கி...’, 'மாமா எப்போ ட்ரீட்டு?’ பாடல்கள் ரண்டக்க ரண்டக்க ரகம். ஆக்ஷன் படத்துக்கான ஃபுல் டெம்போவையும் கடத்துகிறது கணேஷ் ராஜவேலுவின் ஒளிப்பதிவு.
ரொம்ப நேரம் ஜில்லாவைச் சுற்றிக் காட்டிக்கொண்டே இருந்தால்,  கண்ணு வேர்க்காதா பாஸ்?
- விகடன் விமர்சனக்குழு

Thursday, September 5, 2013

விகடன் திரை மதிப்பெண் - Vikatan Cine Ratings


திரை விமர்சனம் எழுதுவதிலும் அதற்கு மதிப்பெண் வழங்குவதிலும் ஆனந்த விகடன் பாணி அலாதியானது.

ஆனந்த விகடன் விமர்சனங்களே சில வேளைகளில் பதிவர்கள் இடையே விமர்சனதிற்கு உள்ளாகின்றன. பக்கசார்பு, உச்ச நட்சத்திரங்களுக்கு ஜால்ரா என்றெல்லாம் பலர் பலவாறு கூறினாலும் அவர்களின் தனித்துவம் அவர்களின் மதிப்பெண் முடிவுகளுக்கு முக்கியத்துவம் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது.




அந்த வகையில் அவர்கள் சமீபத்தில் வந்த சில படங்களுக்கு வழங்கிய புள்ளிகளை இங்கே பட்டியலிடுகின்றேன். உங்கள் விருப்ப படங்களை மாற்றைய படங்களோடு ஒப்பிட்டு பார்த்து கொள்ளுங்கள்,

* ஆதலால் காதல் செய்வீர் - 


* ஐந்து ஐந்து ஐந்து (555) - 


* தலைவா - 


* பட்டத்து யானை - 



* மரியான் - 

* சிங்கம் 2 - 

* தில்லுமுல்லு  - 


* தீயா வேலை செய்யணும் குமாரு - 

* குட்டிப்புலி  - 

* நேரம் - 

* சூது கவ்வும் - 


* எதிர் நீச்சல் - 


* மூன்று பேர் மூன்று காதல் - 


* உதயம் NH4 - 

* சேட்டை - 

* கேடி பில்லா கில்லாடி ரங்கா - 

* சென்னையில் ஒரு நாள் - 

* சுண்டாட்டம் - 


* பரதேசி - 


* ஹரிதாஸ் - 


* ஆதி-பகவான் - 

* விஸ்வரூபம் - 


* கடல் - 

* சமர் - 

* கண்ணா லட்டு திண்ண ஆசையா - 

* அலெக்ஸ் பாண்டியன் - 

* நீதானே என் பொன் வசந்தம் -  

* கும்கி - 

* நீர்ப்பறவை - 

* நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் - 

* துப்பாக்கி - 

* போடா போடி - 

* ஆரோகணம் - 

* பிட்சா - 

* சுந்தர பாண்டியன் - 

* சாட்டை - 

*  மாற்றான் - 

* தாண்டவம் - 






Tuesday, September 3, 2013

ஆதலால் காதல் செய்வீர் - விகடன் விமர்சனம்

'ஆதலால் காதல் (மட்டும்) செய்வீர்’ படம்!
க்ளாஸ்மேட்  சந்தோஷ் ரமேஷ் (அறிமுகம்) - மனீஷாவுக்கு காதல். சின்னச் சின்ன சில்மிஷங்கள் 'ஓவர் தனிமை’ அளவுக்கு எல்லை மீற, கர்ப்பமாகிறார் மனீஷா. பெற்றோருக்குத் தெரியாமல் கருவைக் கலைக்க முயல்கிறார்கள். ஆனால், விஷயம் தெரிந்துவிடுகிறது. காதலர்கள் ஒன்றுசேர நினைக்க,  'கருவைக் கலைக்க வேண்டும்’ என்பதை சந்தோஷின் பெற்றோர் நிபந்தனையாக வைக்கிறார்கள். 'குழந்தைதான் ஒரே ஆதாரம்’ என மனீஷா மறுக்க, வயிற்றுப் பிள்ளையை வைத்து நடத்தப்படும் நாடக சென்ட்டிமென்ட் டால் காதலும் கருவும் என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்!
நீண்டகாலத் தயாரிப்பாக இருந்தாலும், 'நாடகக் காதல்’ என்ற பதம் தமிழகத்தில் பரபரக்கும் சூழலில்  வெளியாகியிருப்பதால் 'டாபிக்கல் டச்’ சினிமாவாகிவிட்டது.  
'நான் ஹஸ்பண்ட்னு சொன்னா நம்ப மாட்டாங்க...’ என்று தன் காதலியின் கருவைக் கலைக்க நண்பனைக் கணவனாக நடிக்க வைக்குமிடம்... பெரியவர்களுக்கான பகீர். ஒரு கணம் உலுக்கியெடுக்கும் அந்த க்ளைமாக்ஸ் பாடல்... இளைஞர்களுக்கான திகீர். இந்த இரண்டும் ஓ.கே. ஆனால், மற்றபடி எந்தத் திருப்பமுமற்ற திரைக்கதை அலுப்பு!
நட்சத்திரப் பட்டாளம் இல்லாத மொத்தப் படத்தையும் ஒற்றைத் தூணாகத் தாங்கி நிற்பது மனீஷாவின் விழி, இதழ்களும் உடல் மொழிகளும் மட்டுமே! வீட்டில் காதலை மறைக்க மனீஷா செய்யும் சேட்டைகளும் குறும்புகளும்... ச்சோ ஸ்வீட்!  'உன்  பொண்ணு படுத்ததுக்கு எவ்ளோ காசு வேணுமோ, அதை வாங்கிட்டுப் போ’  என்று பஞ்சாயத்துக்களில் தெறித்து விழும் வார்த்தைகளின்போது, ஒரு வார்த்தைக் கூட பேசாமல் விம்மி அழும் காட்சியில் பதற வைக்கிறார் ஜெயப்பிரகாஷ். 'நீங்க மாமா ஆகிட்டீங்க’ என்று சந்தோஷை வாழ்த்தும்போது, 'நீங்க வேற... சீக்கிரமே அவன் அப்பாவே ஆகப் போறான்’ என்று கலாய்க்கும் இடங்களில் சிரிக்க வைக்கிறார் அர்ஜுன். இந்தக் கதாபாத்திரங்களுக்காக மெனக்கெட்ட அளவுக்கு, சந்தோஷின் பாத்திரத்தை வலுவாக்கவில்லையே டைரக்டர் சார். சைக்கிள் கேப்பில் பெல் அடிக்கும் ஸ்கோப்கூட இல்லாமல் திண்டாடுகிறார் சந்தோஷ்.  
'லவ்வர்ஸை அப்படியே விட்ரணும்... அவங்களா சண்டைபோட்டுப் பிரிஞ்சுடுவாங்க. நாம பிரிக்க நினைச்சாதான், அவங்க காதல் ஸ்ட்ராங் ஆகிரும்’, 'உங்க பொண்ணு செத்துட்டானு நினைச்சு வந்து சேருங்க’... சூழ்நிலைக்கேற்ற சுசீந்திரன் - கிளைட்டனின் நச் நச் வசனங்கள் படத்தின் பலம்! பாடல்கள், பின்னணி இசை இரண்டிலும் ஏன் இத்தனை ஆவரேஜ் ஸ்கோர் யுவன்? முன்பாதியில் கேம்பஸ் உற்சாக வண்ணங்கள் பொழியும் ஏ.ஆர்.சூர்யாவின் ஒளிப்பதிவு, க்ளைமாக்ஸ் காட்சிகளில் அழுத்தம் சேர்க்கிறது. ஆனால், காட்சிகளின் வீரியத்துக்காக அந்தப் பச்சைக் குழந்தையை படாதபாடு படுத்தியிருப்பது... பயங்கரம்!  
   'இளைய தலைமுறை இப்படி இருக்கிறதே’ என்ற இயக்குநரின் ஆதங்க அக்கறையை, அலட்சியமான சம்பவங்கள் அழுத்தமில்லாமல் வீரியமிழக்க வைத்துவிட்டது!      
- விகடன் விமர்சனக் குழு