Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

Wednesday, June 5, 2013

சந்தோஷ் சிவனின் "CEYLON" - First look poster



'தளபதி', 'ரோஜா', 'இருவர்', 'ராவணன் உள்ளிட்ட பல படங்களுக்கு தனது வித்தியாசமான கேமிரா கோணம், ஒளி அமைப்புகளால் பெயர் பெற்றவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இணைப்பில் உருவான 'துப்பாக்கி' படத்தின் ஒளிப்பதிவாளர் இவரே. ப்ருத்விராஜ் நடித்த 'உருமி' என்ற படத்தினையும் இயக்கி இருக்கிறார்.

'துப்பாக்கி' வெளியான நேரத்தில் 'அடுத்ததாக 'CEYLON' என்ற படத்தினை இயக்க இருக்கிறேன்" என்று அறிவித்தார். இலங்கைப் பற்றிய படமாக இருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இன்று 'Ceylon' படத்தின் FIRST LOOK POSTERஐ தனது ட்விட்டர் இணையத்தில் வெளியிட்டுள்ளார் சந்தோஷ் சிவன். அப்படியே இலங்கையின் வரைப்படத்தினை கொண்டே அப்படத்தின் FIRST LOOK அமைந்து இருப்பது, படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.

படத்தின் டிரெய்லர் குறித்து சந்தோஷ் சிவன் தனது ட்விட்டர் இணையத்தில் " படத்தில் வரும் எட்டு இளம் அனாதைகளின் வலியையும், அதே சமயத்தில் நகைச்சுவை சீக்வென்டுகளோடும் ட்ரெயிலர் பக்காவாக வரும் என எடிட்டர் சுரேஷ் வாக்குறுதி அளித்திருக்கிறார். நண்பர் அரவிந்த்சாமியின் குரல் படத்திற்கு ஒரு பெரிய ப்ளஸ்'' என்றிருக்கிறார்.
தமிழில் இப்படத்திற்கு 'இனம்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்

- நன்றி விகடன்
.

Sunday, May 26, 2013

பசு கொலையை தடுக்க கோரி இலங்கை பிக்கு தீக்குளிப்பு

இலங்கை தலதா மாளிகையின் முன்னால் பிக்கு ஒருவர் தீக்குளித்து மரணமான சம்பவம் தலைநகர் கொழும்பில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. 

பசுக்களை கொள்வதற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக நேற்று வண. போவத்த இந்திரட்ன தேரர்  தீக்குளித்து மரணமானார். முஸ்லிம்களின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் எதிரான இலங்கை பிக்குகளின் நிலைப்பாட்டை இந்த செயல் நன்று பிரதி பலிப்பதாக உள்ளது.

சாந்தி, அமைதி, தியானம் என்ற கொள்கைகளை கொண்ட பௌத்த மதத்தின் போதகர் தனக்கு தானே தீயிட்டு மாண்டிருப்பது, அதுவும் புத்த பெருமான் ஜனன தினமான நேற்று இச்சம்பவம் நடந்திருப்பது உண்மையில் இலங்கை சாதுக்கள் (சிங்களத்தில் பிக்குவை சாது என்பர்), சாதுக்கள் இல்லை என்பதையே எடுத்து காட்டுகிறது.

பசு வதைக்கு எதிராக தீக்குளிக்க துணியும் துறவிகள் தமிழர் வதைகளுக்கு உட்பட்ட நேரம் தாய் நட்டு பெருமை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருந்தமை குறிப்பிட தக்கது.