Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts
Showing posts with label படித்ததில் பிடித்தது. Show all posts

Thursday, August 29, 2013

குட்டி கதை - பட்டினத்து லிப்ட்

ஹாய் பிரெண்ட்ஸ் !
ரொம்ப நாள் அப்புறம்... உங்களுக்காக ஒரு குட்டி கதை வச்சிருக்கேன்...
வாசிங்க என்ஜாய் பண்ணுங்க!


ஒரு கிராமத்து ஏழை பையனும் அவனோட குடும்பமும் பட்டினம் வந்தாங்களாம். அங்கே ஒரு ஷாப்பிங் மால் கு போனாங்களாம்.

அங்கே அந்த பையன் ஒரு அபூர்வமான விஷயத்த கண்டானாம். உடனே அவன் அப்பா கிட்ட வந்து, "அப்பா அதோ அந்த சுவர் தானாகவே ரெண்டா பிரிஞ்சி தானா முடிகிறது" னு காட்டினானாம்.

முன்ன பின்ன லிப்ட்ட கண்டிராத அப்பனும், "நானும் இப்போ தான் இப்டி ஒன்ன பார்க்குறேன் மகனே" னு வாய பிழந்து பார்த்துகிட்டு இருந்தானாம்.

அந்த நேரம் பார்த்து ஒரு 40 வயது ஆன்டி பட்டன தட்டி லிப்ட திறந்து உள்ள போனாளாம். கதவும் மூடிகிச்சாம். ஆனா இந்த கிராமத்து அப்பாவும் மகனும் வாய மூடாம என்னதான் நடக்குது னு பார்த்துகிட்டே இருந்தங்களாம்.

பக்கத்துல இருந்த போர்ட்ல நம்பர் ஒன்னு ஒன்னா கூடிகிட்டே போச்சாம் 1....2.....3.....4.....5......6.... அப்புறம் திரும்ப ஒன்னு ஒன்னா குறைஞ்சி 1 கே  வந்ததும் கதவு திறந்துதாம்.

உள்ள இருந்து ஒரு 24 வயது பெண் - மாடல் அழகி மாதிரி வெளில வந்தாளாம்.

உடனே அந்த அப்பன் பையன் கிட்ட சொன்னானாம் "டேய் மகனே! உடனே போய் உங்கம்மாவ கூட்டி வா!"




Sunday, June 2, 2013

ரஜினி சொன்ன குட்டிக் கதை



ரஜினிக்கே மிகப் பிடித்த குட்டிக் கதை!

ஒரு தாய் ஒட்டகமும் அதன் குட்டி ஒட்டகமும் பேசிக்கொண்டு இருந்தன. குட்டி மனசில் நிறைய கேள்விகள்.

‘நமக்கு ஏன் அம்மா இத்தனை நீளமான கால்கள்?’ என்றது குட்டி.

‘அதுவா மகனே, பாலைவனத்தில் மிக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதுவும் மணல் பூமி. அதனால்தான் நமக்கு நீண்ட கால்கள் வழங்கினார் கடவுள்’ என்றது தாய் ஒட்டகம்.

‘நமக்கு ஏன் இத்தனை முரட்டு உதடுகள்? கற்கள் போல பற்கள்?’

‘அதுவா மகனே, பாலைவனத்தில் கிடைப்பதெல்லாம் முள்தாவரங்கள்தானே. அவற்றை மெல்லுவதற்கு வசதியாகக் கடவுள் செய்த ஏற்பாடு!’

‘நம் உடலில் ஏன் இத்தனை பெரிய தண்ணீர்ப் பை?’

‘அதுவா மகனே, பாலைவனத்தில் தண்ணீர் கிடையாதே. அதனால் பயணத்தில் தாகமெடுத்தால், நா வறண்டு நாம் தடுமாறக் கூடாது என்று கருணைகொண்டு கடவுள் தந்த பரிசு இது!’ என்று தாய் ஒட்டகம் பதில் சொன்னதும், ‘அதெல்லாம் சரி, பிறகு ஏனம்மா நாம் இப்படி சர்க்கஸில் இருக்கிறோம்?’ எனக் கேட்டதாம் குட்டி ஒட்டகம்.

இந்தக் கதையை ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு, ‘நாமெல்லாம் சர்க்கஸ் ஒட்டகங்கள்தானே!’ எனச் சிரிப்பது ரஜினி பாணி!

Wednesday, May 29, 2013

படித்ததில் பிடித்தது - ஒரு குட்டிக் கதை


பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”

தமிழன்டா !!!!!


courtesy சிவகார்த்திகேயன் facebook