பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஒளிபரப்பப்பட்டது.
எதிர்பார்ப்புக்கு காரணம் - கடந்த வாரம் வியாழன் அன்
று போட்டியில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரி (கான்ஸ்டபிள்) ஒருவர் ஓரிரு கேள்விகளுக்கு சரியான பதில் கொடுத்ததும் நிகழ்ச்சி முடிவடையும் நேரம் வந்து விட்டது. மறுநாள் அவர் தொடந்து விளையாடும் நிகழ்ச்சி ஒளிபரப்ப படவில்லை. மாறாக சிவகார்த்திகேயன் பங்குபெற்ற பழைய நிகழ்ச்சியே ஒளிபரப்பப்பட்டது.
அப்போவே மைன்டுல லைட்டா ஒரு டவுட்டு வந்தது. விஜய் டிவியின் வழக்கமான விளம்பர உத்தி ஏதும் இருக்குமோ னு.
அடுத்த நாளே விளம்பரம் வந்தது - நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - you created history in this stage னு அந்த போலீஸ் அதிகாரி ஒரு கோடி வெல்வதை போன்று கட்டினார்கள்.
சரி என்னதான் நடக்கிறது என்று இந்த வாரம் திங்கட்கிழமை நிகழ்ச்சியை பார்த்தால் அன்றும் பழைய எபிசோடு தான் காட்டப்பட்டது.
ஓவர் பில்ட்டப்பா இருக்கேனு அடுத்த நாளும் பார்த்தேன். வந்தார் போலீஸ் அதிகாரி.
கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அசால்ட்டாக பதில்களை போட்டு தாக்கினார். முதல் 10 கேள்விகளுக்கும் லைப் லைன் ஏதும் பயன்படுத்தாமலே பதில் சொன்னவர். 11வது கேள்வியில் ஆடியன்ஸ் போல் ஐ எடுத்தார். 13வது கேள்விக்கு சரியான பதில் சொன்னவுடன் நிகழ்ச்சி முடிவடைய, கிட்டத்தட்ட மக்கள் மத்தியில் ஒரு ஹாட் டாபிக் ஆனது இந்த போலீஸ் அதிகாரி பங்குபெற்ற நிகழ்ச்சி.
இன்றைய நிகழ்ச்சி, ஒரு கோடிக்கு இரண்டே கேள்விகள் இருக்கும் நிலையில் தொடங்கியது. முதலாவதாக கேட்கபட்ட 14வது கேள்விக்கு அதிரடியாக பதில் கொடுத்து அசத்தினார் அதிகாரி.
15வது கேள்வி - இரண்டு லைப் லைன்கள் மீதம் இருக்க கேட்கப்பட்டது.
தூர்தர்சன் தொடக்க இசையில் பங்காற்றியவர் பற்றிய கேள்வி. 50:50 இரண்டு விடைகளை விடுவித்தது.
அதிகாரி கொஞ்சம் தடுமாறினார். இறுதியில் சரியான முடிவு எடுத்து, 50 லட்சத்துடன் போட்டியில் இருந்து விலகினார். அவர் கணித்த பால முரளி கிருஷ்ணா பிழையானது. பண்டிட் ரவிசங்கர் என்பதே சரியான பதில்.
(பாலமுரளி கிருஷ்ணா இல்லை னு எனக்கு அப்போவே தோனிச்சி. காரணம் அவர் ஒரு தென் இந்தியர்)
எதிர்பார்ப்போடு பார்த்த நமக்கு வடை போச்சே னு ஆகிவிட்டது. விஜய் டிவியின் விளம்பர உத்தி நம்மை ஏமாற்றினாலும், அந்த நிகழ்ச்சிக்கு நிறைய எதிர்பார்ப்பை உண்டுபண்ணி விட்டிருக்கிறது.
எது எப்படியோ - சினிமாவில் மாத்திரம் போலீஸ் ஹீரோவை பார்த்திருந்த நமக்கு அந்த அதிகாரி நிஜமான ஹீரோ போலவே தெரிந்தார்.
அவர் சொன்ன சில வரிகள் சூப்பர் - நான் கடவுளை நம்ப மாட்டேன். எப்டி கடவுளை நான் நம்புறதில்லையோ அது போல அதிர்ஷ்டத்தையும் நம்புறதில்ல - இது அவர் 15வது கேள்வியில் விலகியதற்கு சொன்ன பதில்.
சல்யூட் சார் !
No comments:
Post a Comment