யூனிவர்சல் பிக்சர்ஸின் த பர்ஜ் இன்று வெளியாகியிருக்கிறது. த்ரில்லர் படம். ப்ளும் புரொடக்ஷன் தயாரிப்பான இதற்கு யூனிவர்சல் செலவழித்தது 3 மில்லியன் டாலர்கள் மட்டுமே. அவர்கள்தான் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
2002 ல் அமெரிக்காவில் குற்றங்கள் அதிகரித்து விடுகிறது. சிறைகளில் குற்றவாளிகளை அடைக்க இடமில்லை. மக்கள் தொகையும் அதிகம். அதனால் அரசாங்கமே வருடத்துக்கு ஒருமுறை பன்னிரண்டு மணி நேரம் அமெரிக்காவை ஃப்ரியாக விட்டுவிடுகிறது. அதாவது பன்னிரண்டு மணி நேரத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், கொலை கூட. எதுவுமே குற்றமில்லை. குற்றவாளிகளின், மக்களின் எண்ணிக்கையை குறைக்க நடத்தப்படும் இந்த பன்னிரண்டு மணிநேர சுத்திகரிப்புதான் த பர்ஜ்.
மே 24 வெளியான நாளிலிருந்து யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருக்கும் பாஸ்ட் அண்ட் பியூரியஸ் 6 படத்தை பின்னுக்குத் தள்ளி த பர்ஜ் முதலிடத்தை பிடிக்கும் என்று கணித்திருக்கிறார்கள்.
2022 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி மாலை 7 மணி முதல் காலை 7 மணிவரை நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த பன்னிரண்டு மணி நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சட்டம் கண் மூடிக் கொள்ளும். படத்தின் நாயகன் தனது டீன்ஏஜ் மகள் மற்றும் 14 வயது மகனுடன் பலத்த செக்யூரிட்டி சிஸ்டம் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பாக அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பிக்கிறான். தெருவில் ஒருவன் உயிருக்குப் பயந்து அலறுவதைப் பார்க்கும் மகன் அவனை வீட்டிற்குள் அனுமதிக்கிறான். அதனைத் தொடர்ந்து முகமூடி அணிந்த ஒரு கும்பல் அந்த வீட்டை முற்றுகையிடுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு நொடியும் கொல வெறிதான்.
ஆர் ரேட்டட் படமான இது இளைஞர்களை அதிகம் கவரும், வார இறுதியில் 26 மில்லியன் டாலர்களை படம் வசூலிக்கும் என யூனிவர்சல் கனவு காண்கிறது. அமெரிக்காவின் மனநிலைக்கு 26 மில்லியன் கம்மிதான்.
- நன்றி WEBDUNAI
No comments:
Post a Comment