Saturday, June 8, 2013

THE PURGE - திரைமுன்னோட்டம் - அமெரிக்கா - இங்கு சட்டப்படி கொலை செய்யலாம்



FILE
என்னது... அமெரிக்காவில் கொலை செய்வது தவறில்லையா? ஆனால் இது இன்றைய அமெரிக்காவில் இல்லை. 2022 ல். பு‌ரியவில்லை?

யூனிவர்சல் பிக்சர்ஸின் த பர்‌ஜ் இன்று வெளியாகியிருக்கிறது. த்‌ரில்லர் படம். ப்ளும் புரொடக்ஷன் தயா‌ரிப்பான இதற்கு யூனிவர்சல் செலவழித்தது 3 மில்லியன் டாலர்கள் மட்டுமே. அவர்கள்தான் படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

2002 ல் அமெரிக்காவில் குற்றங்கள் அதிக‌ரித்து விடுகிறது. சிறைகளில் குற்றவாளிகளை அடைக்க இடமில்லை. மக்கள் தொகையும் அதிகம். அதனால் அரசாங்கமே வருடத்துக்கு ஒருமுறை பன்னிரண்டு மணி நேரம் அமெரிக்காவை ஃப்‌ரியாக விட்டுவிடுகிறது. அதாவது பன்னிரண்டு மணி நேரத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், கொலை கூட. எதுவுமே குற்றமில்லை. குற்றவாளிகளின், மக்களின் எண்ணிக்கையை குறைக்க நடத்தப்படும் இந்த பன்னிரண்டு மணிநேர சுத்திக‌ரிப்புதான் த பர்‌ஜ்.
FILE

மே 24 வெளியான நாளிலிருந்து யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தில் இருக்கும் பாஸ்ட் அண்ட் பியூ‌ரியஸ் 6 படத்தை பின்னுக்குத் தள்ளி த பர்‌ஜ் முதலிடத்தை பிடிக்கும் என்று கணித்திருக்கிறார்கள். 

2022 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி மாலை 7 மணி முதல் காலை 7 மணிவரை நேரம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த பன்னிரண்டு மணி நேரத்தில் எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். சட்டம் கண் மூடிக் கொள்ளும். படத்தின் நாயகன் தனது டீன்ஏ‌ஜ் மகள் மற்றும் 14 வயது மகனுடன் பலத்த செக்யூ‌ரிட்டி சிஸ்டம் உள்ள தனது வீட்டில் பாதுகாப்பாக அமர்ந்து டிவி பார்க்க ஆரம்பிக்கிறான். தெருவில் ஒருவன் உயிருக்குப் பயந்து அலறுவதைப் பார்க்கும் மகன் அவனை வீட்டிற்குள் அனுமதிக்கிறான். அதனைத் தொடர்ந்து முகமூடி அணிந்த ஒரு கும்பல் அந்த வீட்டை முற்றுகையிடுகிறது. அதன் பிறகு ஒவ்வொரு நொடியும் கொல வெறிதான்.

ஆர் ரேட்டட் படமான இது இளைஞர்களை அதிகம் கவரும், வார இறுதியில் 26 மில்லியன் டாலர்களை படம் வசூலிக்கும் என யூனிவர்சல் கனவு காண்கிறது. அமெரிக்காவின் மனநிலைக்கு 26 மில்லியன் கம்மிதான்.


- நன்றி WEBDUNAI 

ஒசாமாவைக் கொல்ல திட்டமிட்ட இலங்கைத் தமிழருக்கு விருது!


சர்வதேச பயங்கரவாதி, ஒசாமா பின்லேடனை, கொல்லப் பயன்படுத்தப்பட்ட, நைட்விஷன் என்ற டெக்னாலஜியை கண்டுபிடித்த, அமெரிக்க வாழ் இலங்கை தமிழருக்கு, அமெரிக்க அரசின் சார்பில், "சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ஜ்' விருது வழங்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவில், ஆண்டு தோறும், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், சமூக சேவையில் ஈடுபடுபவர்களுக்கும், அந்நாட்டு அரசு, "சாம்பியன்ஸ் ஆப் சேன்ஜ்' விருது வழங்கி, கவுரவிக்கிறது.இந்த ஆண்டு, அமெரிக்க வாழ் இலங்கை தமிழரான, சிவலிங்கம் சிவனாதனுக்கு, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச பயங்கரவாதியான, ஒசாமா பின்லேடனை கொல்ல மேற்கொள்ளப்பட்ட, "நைட்விஷன்' தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததற்காக இந்த விருது, இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


இவர், யாழ்பாணத்தில் உள்ள, சாவகசேரியில் பிறந்தவர். தன் உயர் கல்விக்காக, 1982ம் ஆண்டு அமெரிக்கா சென்ற சிவனாதன், இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்று, இலினாய்ஸ் பல்கலையில், முனைவர் பட்டமும் பெற்றார்.



- நன்றி WEBDUNAI

Wednesday, June 5, 2013

விஜய் டிவி - நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - நடந்தது என்ன !


பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கும் விஜய் டிவியின் 'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' மக்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஒளிபரப்பப்பட்டது.

எதிர்பார்ப்புக்கு காரணம் - கடந்த வாரம் வியாழன் அன்
று போட்டியில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரி (கான்ஸ்டபிள்) ஒருவர் ஓரிரு கேள்விகளுக்கு சரியான பதில் கொடுத்ததும் நிகழ்ச்சி முடிவடையும் நேரம் வந்து விட்டது. மறுநாள் அவர் தொடந்து விளையாடும் நிகழ்ச்சி ஒளிபரப்ப படவில்லை. மாறாக சிவகார்த்திகேயன் பங்குபெற்ற பழைய நிகழ்ச்சியே ஒளிபரப்பப்பட்டது.

அப்போவே மைன்டுல லைட்டா ஒரு டவுட்டு வந்தது. விஜய் டிவியின் வழக்கமான விளம்பர உத்தி ஏதும் இருக்குமோ னு.

அடுத்த நாளே விளம்பரம் வந்தது - நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி - you created history in this stage னு அந்த போலீஸ் அதிகாரி ஒரு கோடி வெல்வதை போன்று கட்டினார்கள்.

சரி என்னதான் நடக்கிறது என்று இந்த வாரம் திங்கட்கிழமை நிகழ்ச்சியை பார்த்தால் அன்றும் பழைய எபிசோடு தான் காட்டப்பட்டது.
ஓவர் பில்ட்டப்பா இருக்கேனு அடுத்த நாளும் பார்த்தேன். வந்தார் போலீஸ் அதிகாரி.

கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் அசால்ட்டாக பதில்களை போட்டு தாக்கினார். முதல் 10 கேள்விகளுக்கும் லைப் லைன் ஏதும் பயன்படுத்தாமலே பதில் சொன்னவர். 11வது கேள்வியில் ஆடியன்ஸ் போல் ஐ எடுத்தார். 13வது கேள்விக்கு சரியான பதில் சொன்னவுடன் நிகழ்ச்சி முடிவடைய, கிட்டத்தட்ட மக்கள் மத்தியில் ஒரு ஹாட் டாபிக் ஆனது இந்த போலீஸ் அதிகாரி பங்குபெற்ற நிகழ்ச்சி.

இன்றைய நிகழ்ச்சி, ஒரு கோடிக்கு  இரண்டே கேள்விகள் இருக்கும் நிலையில் தொடங்கியது. முதலாவதாக கேட்கபட்ட 14வது கேள்விக்கு அதிரடியாக பதில் கொடுத்து அசத்தினார் அதிகாரி.

15வது கேள்வி - இரண்டு லைப் லைன்கள் மீதம் இருக்க கேட்கப்பட்டது.
தூர்தர்சன் தொடக்க இசையில் பங்காற்றியவர் பற்றிய கேள்வி. 50:50 இரண்டு விடைகளை விடுவித்தது.

அதிகாரி கொஞ்சம் தடுமாறினார். இறுதியில் சரியான முடிவு எடுத்து, 50 லட்சத்துடன் போட்டியில் இருந்து விலகினார். அவர் கணித்த பால முரளி கிருஷ்ணா பிழையானது. பண்டிட் ரவிசங்கர் என்பதே சரியான பதில்.
(பாலமுரளி கிருஷ்ணா இல்லை னு எனக்கு அப்போவே தோனிச்சி. காரணம் அவர் ஒரு தென் இந்தியர்)

எதிர்பார்ப்போடு பார்த்த நமக்கு வடை போச்சே னு ஆகிவிட்டது. விஜய் டிவியின்  விளம்பர உத்தி நம்மை ஏமாற்றினாலும், அந்த நிகழ்ச்சிக்கு நிறைய எதிர்பார்ப்பை உண்டுபண்ணி விட்டிருக்கிறது.

எது எப்படியோ - சினிமாவில் மாத்திரம் போலீஸ் ஹீரோவை பார்த்திருந்த நமக்கு அந்த அதிகாரி நிஜமான ஹீரோ போலவே தெரிந்தார்.

அவர் சொன்ன சில வரிகள் சூப்பர் - நான் கடவுளை நம்ப மாட்டேன். எப்டி கடவுளை நான் நம்புறதில்லையோ அது போல அதிர்ஷ்டத்தையும் நம்புறதில்ல - இது அவர் 15வது கேள்வியில் விலகியதற்கு சொன்ன பதில்.

சல்யூட் சார் !