Wednesday, May 29, 2013

படித்ததில் பிடித்தது - ஒரு குட்டிக் கதை


பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரியாக இருந்த நேரம். ஐரோப்பிய மைக்ரோசாப்டின் கிளைக்கு தலைமை அதிகாரியை நியமிக்க, ஒரு நேர்காணலை நடத்தி கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் வந்திருந்தார்கள். ஒரு பெரிய அறையில் எல்லோரும் குழுமியிருந்தார்கள். கருப்பு கோட், நீல சட்டை, புள்ளி போட்ட டையுடன் எல்லாவற்றையும் கவனித்தப்படி ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார், நம்ம கந்தசாமி.

உள்ளே நுழைந்த பில் கேட்ஸ், 5000 பேர்களை பார்த்ததும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார். வந்திருந்த அனைவருக்கும் வணக்கம் வைத்தார். பிறகு, நன்றி தெரிவித்தார். சிக்கீரம் முடிக்கணும், சிம்பிளா வைக்கணும்ன்னு முடிவு பண்ணினார்.

முதலில் தொழில்நுட்ப அறிவை சோதிக்க வேண்டும் என்று விரும்பி ஒரு கேள்வி கேட்க நினைத்தார். எப்படியும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு, மைக்ரோசாப்ட் டெக்னாலஜி தெரிந்துதான் வந்திருப்பார்கள். அதனால், இப்படி கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா தெரியும்? தெரியாதவர்கள் மன்னிக்கவும். நீங்கள் கிளம்பலாம்.”

2000 பேர் இடத்தை காலி செய்தார்கள்.

நம்ம கந்தசாமிக்கும் ஜாவா தெரியாதுதான். இருந்தும் போகலையே!

“இப்படியே இங்க இருந்தா, எதையும் இழக்க போறது இல்ல. எதுக்கு போய்கிட்டு? என்னத்தான் நடக்குது பார்ப்போம்” என்றபடி அங்கேயே இருந்து விட்டார்.

அடுத்த கேள்வி, “உங்களில் யாரெல்லாம் நூறு பேருக்கு மேல் ஆட்களை நிர்வகித்து இருக்கிறீர்கள்? அவர்கள் மட்டும் இருக்கலாம்.”

இன்னொரு 2000 வெளியே கிளம்பியது.

கந்தசாமி - “நான் ஒருத்தரைக்கூட நிர்வகித்தது கிடையாதே? என்ன செய்யலாம்? சரி, அடுத்த கேள்வியை கேட்கலாம்.”

இன்னும் ஆயிரம் பேர் இருக்கிறார்களா? என்று நினைத்துக்கொண்டு பில் கேட்ஸ் கேட்டார், “மேலாண்மை பட்டம் பெறாதவர்கள் தயவுசெய்து...”.

சொல்லி முடிக்கும் முன்பே, 500 இருக்கைகள் காற்று வாங்கியது.

”அதையெல்லாம் படிக்க நமக்கு எங்க நேரம் இருந்தது?” பெருமூச்சுவிட்டபடி பில் கேட்ஸையே பார்த்து கொண்டிருந்தார், கந்தசாமி.

ஐரோப்பிய மொத்த கண்டத்திற்கு முழுமையான தலைமை பதவியாச்சே? கண்டம் முழுக்க சுற்ற வேண்டி இருக்குமே? எத்தனை மொழிகள் தெரிந்திருக்கும் என்று பார்ப்போம் என்று அடுத்த கேள்வியை கேட்டார்.

“உங்களில் யாருக்கெல்லாம் செர்போ-க்ரோட் மொழி தெரியும்?” - செர்போ-க்ரோட், உலகில் அரிதாக பேசப்படும் மொழி.

இப்ப, அரங்கில் இரண்டே பேர் இருந்தார்கள். அதில் ஒருவர் யாரென்று உங்களுக்கு தெரியும்.

அது, “எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?” என்ற நினைப்பில் நம்ம கந்தசாமி.

ஆனாலும், மனசுக்குள் பயம்தான். மூன்று பேரும் ஒரு வட்ட டேபிளை சுற்றி உட்கார்ந்தார்கள். இருவரையும் பார்த்தார், பில் கேட்ஸ்.

டிக் டிக்... டிக் டிக்... டிக் டிக்...

“ஏன்ப்பா, இப்படி பார்க்குற? சீக்கிரம் ஏதாவது கேளுப்பா... ” - மனசுக்குள் கந்தசாமி.

”இப்ப, நீங்க ரெண்டு பேர் தான் இந்த மொழி தெரிந்தவர்கள் இருக்குறீர்கள். செர்போ-க்ரோட் மொழியில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை பற்றி, அதன் தொழில்நுட்ப திறன் பற்றி விவாதம் செய்யுங்க.”

கந்தசாமி அமைதியாக, பக்கத்தில் இருந்த இன்னொருத்தனை பார்த்தார். சின்ன வயசுக்காரன். நெஞ்சை நிமிர்த்திக்கிட்டு உட்கார்ந்திருந்தான். மூளைக்காரன் போல!

கந்தசாமி ஆரம்பித்தார்.

மெதுவாக, ”தம்பிக்கு எந்த ஊரு?” - கேட்டது தமிழில்.

“தூத்துக்குடி பக்கம். நீங்க?”

தமிழன்டா !!!!!


courtesy சிவகார்த்திகேயன் facebook  

Sunday, May 26, 2013

பசு கொலையை தடுக்க கோரி இலங்கை பிக்கு தீக்குளிப்பு

இலங்கை தலதா மாளிகையின் முன்னால் பிக்கு ஒருவர் தீக்குளித்து மரணமான சம்பவம் தலைநகர் கொழும்பில் பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது. 

பசுக்களை கொள்வதற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக நேற்று வண. போவத்த இந்திரட்ன தேரர்  தீக்குளித்து மரணமானார். முஸ்லிம்களின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் எதிரான இலங்கை பிக்குகளின் நிலைப்பாட்டை இந்த செயல் நன்று பிரதி பலிப்பதாக உள்ளது.

சாந்தி, அமைதி, தியானம் என்ற கொள்கைகளை கொண்ட பௌத்த மதத்தின் போதகர் தனக்கு தானே தீயிட்டு மாண்டிருப்பது, அதுவும் புத்த பெருமான் ஜனன தினமான நேற்று இச்சம்பவம் நடந்திருப்பது உண்மையில் இலங்கை சாதுக்கள் (சிங்களத்தில் பிக்குவை சாது என்பர்), சாதுக்கள் இல்லை என்பதையே எடுத்து காட்டுகிறது.

பசு வதைக்கு எதிராக தீக்குளிக்க துணியும் துறவிகள் தமிழர் வதைகளுக்கு உட்பட்ட நேரம் தாய் நட்டு பெருமை பற்றி மட்டுமே பேசிக்கொண்டு இருந்தமை குறிப்பிட தக்கது.


Saturday, May 25, 2013

2013 இல் இதுவரை வெளிவந்த பாடல்களின் தரவரிசை


07. அழகோ அழகு - சமர் 
வழமையான யுவன் டச் தெரிந்தாலும், தெளிவான குரலும் அதை கெடுக்காத இசையும் ரசிக்க வைக்கின்றன. யுவன் ரசிகர்களுக்கு ஆதி பகவன் கடுப்பை கொடுத்தலும் சமர் பாடல் ஆறுதல் தருகிறது. விசுவலாகவும்  இந்த பாடல் சிறப்பாக அமைந்தமை கூடுதல் பலம்.

06. நறுமுகையே - சுண்டாட்டம்
தொடக்க வரிகள் மற்றும் பின்னணி இசையில் இந்த பாடல் அதிகம் ஸ்கோர் செய்து விடுகிறது. முதல் படத்திலேயே அடிக்கடி முனுமுனுக்க வைக்கும் படலை தந்தமைக்கு இசை அமைப்பாளருக்கு ஒரு பொக்கே தரலாம்.

05. அவத்த பையா - பரதேசி 
வித்தியாசமான சேலஞ்சிங் ஆன கதை களம். எந்த போர்மட் இசை பொருந்தும் என்று அனுமானிக்க முடியாத நிலையில் GV இன் கற்பனை ரொம்பவும் சூப்பர்.

04. வெளிச்ச பூவே - எதிர் நீச்சல் 
பிரகசாமான எதிர் காலம் தெரிகிறது அனிருத்திடம். 20 வயதில் அவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் பிரம்மிக்க வைக்கிறது. எதிர் நீச்சல் அனைத்து பாடல்களும் பிரம்மாதம் என்றாலும், வெளிச்ச பூவே நெஞ்சில் நின்று பிடிக்கிறது.

03. உன்னை காணாத நான் - விஸ்வரூபம் 
கமல் சொந்த குரலில் பாடிய பாடல்களை பிடிக்காதவர்கள் அரிது. அந்த வரிசையில் கமல் கமகம் பாடி தொடங்கி வைக்கும் இந்த பாடலும் இனிமையாக இருக்கிறது. திரையில் கமல் காட்டும் நளினங்களும் சங்கர் மகாதேவனின் bass voice உம் இணையும் போது, மிளகுடன் தேன் கலந்து சாப்பிட்டது போல உள்ளது.

02. மூங்கில் தோட்டம் - கடல் 
இவ்வளவு ஸ்லா மெலடி மக்கள் மத்தியில் எடு படுமா என்று தயங்காமல் ரஹ்மான் செய்த முயற்சி. கேட்க கேட்க பிடித்து போகிறது இந்த பாடல். சமீபத்தில் விஜய் டிவி யில் இந்த பாடலின் ஒரிஜினல் சிங்கர்ஸ் (ஹரிணி, Male வாய்ஸ் பெயர் தெரியவில்லை) பாடிய போது இன்னமும் புலப்படாத இனிமை இதில் இருப்பதாக தோன்றியது.

01. கடல் ராசா - மரியான் 
மீண்டும் ரஹ்மான்! ரஹ்மான் இசையுடன் கால சக்கரத்தை ஓட்டி செல்லும் என் போன்ற ரசிகர்களுக்கு ரஹ்மான் வைத்த மற்றுமொரு விருந்து. யுவன் குரலில் ரஹ்மான் பாதிப்பு இருப்பதாக நினைத்து இருந்தேன். இப்போது ரஹ்மான், யுவனே இனைந்து பாடி இருப்பதால் மனம் கொஞ்சம் துள்ளி குதிக்கிறது.


இந்த வருடத்தின் முதல் 6 மாதத்தில் வெளி வந்த படங்களில் என்னை பொறுத்த வரை இவை மிக சிறப்பாக வந்துள்ளன. எஞ்சியுள்ள 6 மதங்களில் இந்த ரேட்டிங் மாறுகிறத என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

நான் இரசித்த bloggers


நான் இன்று என் முதல் வலை  பதிவாக, இந்த வலைபூ பக்க்கத்தை தொடங்குவதற்கு தூண்டு கோலாக விளங்கிய எனக்கு மிகவும் பிடித் த சில வலைப்பூ பக்கங்களை பகிர்ந்து கொள்கிறேன் .

1. ஜாக்கி சேகர் : இவரது கருத்துகள் ரொம்பவும் straight forward ரகம். தன்னை தானே எழுத்துலக தாதா என்பது போன்று அறிமுகம் செய்து கொள்பவர். சென்சர்ககு அப்பார்ப்பட்ட இவரது கருத்துக்கள் அது உண்மை தான் என்பது போன்று இருக்கும். 
இவரின் எழுதுகளிட்கு நான் சுமார் 3 வருட வாடிக்கையாளன். சில மாதங்களாக இவரது இடுக்கைகள் குறைந்து விட்டமை சற்று வருத்தம் தருகிறது.

2. சி பி செந்தில்குமார்: adrasaka.com இல் இவரது போஸ்ட்ஸ் ஒவ்வொன்றும் தனிதுவமாக இருக்கும். பாமரனுக்கும் புரியும் இவரது தமிழ். திரை விமர்சனங்களில் வசனம் வசனமாக பிரித்து மேயும் இவர், என்னை சில நல்ல படங்களிட்கு அனுப்பி வைத்தவர்.  சில சமயம் போக விடாமல் தடுத்து என் பணத்தை மிச்சம் பிடித்து தந்தவர்.
நாளுக்கு 7-8 போஸ்ட். தமிழ் மனம் டாப் ரேங்க் னு  இவரது பெருமைகள் ஏராளம்.

3. வீடு திரும்பல்: சில நாள் முன்பு தான் இந்த பக்கத்தை பார்க்க நேர்ந்தது. வசிக்கும் போது மனிதரிடம் விஷயம் இருப்பதாக பட்டது உடனே போட்டுவிட்டேன் ஒரு bookmark.

4. 4TamilMedia: இதன் style எனக்கு மிகவும் பிடித்து போனது. நிச்சயமாய் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் சேர்ந்து நடத்தும் ஒன்றாக தோன்றுகிறது.


எதிர் வரும் நாட்களில் நானும் இவர்களை போன்று நல்ல கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதில் நிச்சயம் ஜக்கி சார் பாதிப்பு இருக்கும். இல்லாமல் தடுக்க - போராட வேண்டி இருக்கும் னு  நினைக்கிறன். 

எல்லோர்க்கும் நன்றி. cheers 

-தமிழன் திலீபன்.