Wednesday, March 26, 2014

தனியாக வீட்டில் இருந்தவாறு பார்ட் டைம் ஜாப் தேடும் உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!!

தனியாக வீட்டில் இருந்தவாறு பார்ட் டைம் ஜாப் தேடும் உங்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு!!
கீழே உள்ள லிங்கை சொடுக்கவும்...
உங்கள் வருமனத்திற்கான வழிகாட்டல்களை அவர்களே தருவார்கள்.
டோன்ட் மிஸ் இட் !
~


Please try out the below link and start your part time earnings immediately....
OMG!!! my balance is moving up minute to minute !!!


http://Youthweeklypay.com/?invite=40725

Monday, March 24, 2014

R.I.P to all the victims of #MH370



R.I.P to all the victims of #MH370


கடந்த சில நாட்களாக முழு உலகத்தினதும் பிரதான செய்தியாக விளங்கிய MH 370 விமானத்தின் மர்மம் இன்றுடன் முடிவுக்கு வந்ததது.
தெற்கு இந்து சமுத்திரத்தில் கிடைக்கப் பெற்ற விமான பாகங்கள் MH370 உடையது தான் என்று எந்த ஒரு சந்தேகத்திற்கும் அப்பால் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றன.

உலக மக்கள் அனைவரினதும் பொதுவான பிரார்த்தனை வெறும் கனவாகி போய் இருப்பது அனைவரையும் ஆழ்ந்த துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இறுதியாக MH370 யில் பயணித்த அனைத்து மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்!

Saturday, January 18, 2014

நடுவர்களை அசர வைத்த பூச்சிப் பெண் !

நான் ரசித்த வீடியோ - Americans got talent!




ஒஸகர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியப்படங்களில்லை!


oscar_002ஒஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இந்தியப் படங்கள் ஒன்றுக்குக்கூட இடமில்லை. சர்வதேச அளவில் சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருதுக்கான போட்டிக்கு தெரிவாகி உள்ள படங்கள், நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
86வது ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான இந்த தேர்வு பட்டியலை ஆஸ்கார் அகாடமியின் தலைவர் செரில் பூன் ஐசக்ஸ், நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ஆகியோர் அறிவித்தனர்.
இந்தப் போட்டியில் கிராவிட்டி மற்றும் அமெரிக்கன் ஹஸில் ஆகிய இரு படங்களும் தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் படம் 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து எந்த ஒரு சினிமா படமோ அல்லது நடிகர், நடிகைகளின் பெயரோ இடம் பெறவில்லை. சிறந்த வெளிநாட்டுப் பட பிரிவிலும் கூட இந்தியப் படமோ, இந்தியாவில் தயாரான வேறு எந்தப் படமோ இடம்பெறவில்லை.

- நன்றி தமிழ் லீடர் 

Friday, January 17, 2014

விகடன் சினிமா விமர்சனம் - வீரம்

சினிமா விமர்சனம் - வீரம்



காதல்கைகூடக் கீழே போட்ட அரிவாளை, காதலைக் காப்பாற்ற  மீண்டும் கையில் எடுக் கும்... 'வீரம்’!
ஜில் காதல், ஜாலி கேலி, அதிரடி ஆக்ஷன், சென்ட்டிமென்ட் உருக்கம்... என அஜித்துக்கு ஏற்ற மாஸ் மசாலா பல்ஸைக் கச்சிதமாகப் பிடித்திருக்கிறார் இயக்குநர் சிவா. 'முரட்டுக்காளை’ ஒன்லைன், 'பையா’ ட்விஸ்ட், அரிவாள், ரத்தம், சத்தம்... எனப் பார்த்துப் பழகிய சங்கதிகள்தான் என்றாலும், காமெடி கோட்டிங் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
'ஒட்டன்சத்திரம் விநாயகமாக’ அடி முதல் முடி வரை ஆல் வெள்ளையாக வருகிறார் அஜித். நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கோட், சூட், துப்பாக்கி இல்லாமல் உருக உருகக் காதலிக்கும் அஜித்தைப் பார்க்க... அழகாக இருக்கிறது! ஆக்ஷன் காட்சிகளில் முறைப்பு, காதல் காட்சிகள் தவிப்பு எனப் படம் நெடுக ஹேட்ஸ் ஆஃப்!
ரீ-என்ட்ரியில், தமன்னா இன்னும் அழகு! அரிவாளைப் பார்த்து மயங்கி விழுவது, வீட்டுக்கு வரும் அஜித்தைப் பார்த்துப் பரிதவிப்பது என நடிக்கவும் செய்திருக்கிறார்.  அஜித்தின் தம்பிகளாக வரும் பாலா, விதார்த், சுஹைல், முனீஷ§க்கு 'கும்பல் கோவிந்தா’ வேலைதான் என்றாலும், ஓ.கே. பாய்ஸ்!
முன்-பின்பாதிகளில் காமெடி மேளா நடத்தி படத்தின் நீளத்தை மறக்கச் செய்கிறது சந்தானத்தின் காமெடி. 'வேணாம்னு சொல்றதுக்கே இவ்ளோ வேகமாப் போறாரே...’, 'தள்ளி ஸ்டார்ட் ஆகும்னு பார்த்தா, தானாவே ஸ்டார்ட் ஆகுதே?’ என்று கிடைக்கும் கேப்பில் கெடா வெட்டுகிறார் சந்தானம். அதிலும் சந்தானமும், அஜித்தின் தம்பிகளும் 'படம் எடுக்கிறோம்’ என்று தம்பி ராமைய்யாவைப் படுத்தும்பாடு... ரகளை மாஸ்! திருவிழா கணக்காக வரும் கூட்டத்தில் நாசர், அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, பிரதீப் ராவத் ஆகியோர் கவனிக்கவைக்கிறார்கள்.
திருப்பாச்சி அரிவாளுக்கே தடை விதித்துவிட்டார்கள் தமிழகத்தில். ஆனால், படத்தில் விதவிதமாக, ரகம்ரகமாக அரிவாள்கள் ஆட்களைப் பலிவாங்கிக்கொண்டே இருக்கிறதே! எம்பூட்டு ரத்தம்?
அட, போலீஸ்... போலீஸ்... என ஒரு கேரக்டர் இருப்பதையே மறந்துவிட்டார்கள் போல. அதுல் குல்கர்னியின் அந்த ஃப்ளாஷ்பேக்... செம டிராமா!
பின்னணி இசையில் டெம்போ ஏற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களில் அம்போ என விட்டுவிடுகிறார். வெற்றியின் ஒளிப்பதிவும், காசி விஸ்வநாதனின் எடிட் கட்டும் படத்துக்குப் பெரும்பலம்.
மாஸ் மசாலாதான்... ஆனாலும் டேஸ்ட் பீஸ்!
- விகடன் விமர்சனக் குழு

விகடன் சினிமா விமர்சனம் - ஜில்லா

சினிமா விமர்சனம் - ஜில்லா



ரௌடி வளர்ப்பு மகன் போலீஸாக மாறி, ரௌடி அப்பாவைத் திருத்தினால்... அதுவே ஜில்லா!  
மோகன்லால் - விஜய் என மாஸ் ஆக்ஷன் மசாலா ட்ரீட் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் நேசன். மோகன்லாலைக் கொல்ல நடக்கும் முயற்சிகளைச் சொல்லிவிட்டு, பின்பாதியில் அத்தனை விஷயங்களையும் ஒன்றாகக் கோக்கும் இடத்தில் மட்டும் சுவாரஸ்யம். மற்றபடி பன்ச், பில்டப் என்று மசாலாவைக் 'காட்டு காட்டென்று’ காட்டியதில் கண்ணைக் கட்டுகிறது!
கம்பீர ரௌடி சிவனாக மோகன்லால்... அசத்தல்! நரை தாடி, அகல பாடி எனத் தோன்றும் ஃப்ரேம்களில் எல்லாம் வசீகரிக்கிறார். ஆனால், 'இந்தச் சிவனை...’, 'இந்தச் சிவனுக்கு...’ என ஆரம்பித்து மதுரையில் உட்கார்ந்துகொண்டு அவர் அடிக்கும் பன்ச்களில்... மலையாள வாடை தூக்கல்!
ஆக்ஷன் கதைக்கு விஜய்யின் எக்ஸ்பிரஷன் களும், பாடிலாங்குவேஜும் பக்கா. தீ விபத்தில் பலியான குழந்தைகளைப்  பார்த்துக் கலங்குவதும், அப்பா பாசத்தில் உருகுவதுமாக செம. ஆனால், ஒரு பக்கமாகச் சாய்ந்து சாய்ந்து நடக்கும் ஸ்டைல்... வேணாம் ப்ரோ!  
லேடி போலீஸ் காஜல் அகர்வால். கண்களைச் சுருக்கிக் கோபப்படுவதைத் தவிர வேறு வேலை எதுவும் இல்லை. சம்பத் கோபம், நக்கல், நையாண்டி, வெறி... என எல்லாம் கலந்துகட்டி அடிக்கிறார்.  செம சீரியஸ் கதையில் கொஞ்சம் சிரிப்பு மாவு பிசைவது 'பரோட்டா’ சூரிதான். ''என்னாது 'சாந்தி’ங்கிறது மாடர்ன் பேரா..? காந்தி காலத்திலேயே தடை பண்ணின பேருடா அது...'' என்று விஜய் காதலுக்கு லந்து கொடுக்கும் இடங்களில் கிச்சுக்கிச்சு!
மிரட்டல் அப்பா - அவரது ப்ளஸ் மைனஸ் எல்லாம் அறிந்த செம ஷார்ப் மகன்... இவர்களுக்கு இடையிலான மோதல் தூள் கிளப்ப வேண்டாமா? ஆனால், ஏதோ செல்லச் சண்டை போட்டுக்கொள்வது போல, 'திருந்து - திருந்த முடியாது’ என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஜாலி கேலி முன்பாதி ரசிக்கவைத்தாலும் இரண்டாம் பாதியில் அவ்வளவு நீள ஃப்ளாஷ்பேக்குகள்... சலிப்பு. 'நாம ரௌடியா இருக்கோம்...போலீஸாவும் இருந்தா என்ன?’ என்ற எண்ணமும், திருந்திய விஜய்க்கு சீனியர் பதவி உயர்வு வழங்கும் இடமும்... ப்பா£.!
இமான் இசையில் 'கண்டாங்கி...’, 'மாமா எப்போ ட்ரீட்டு?’ பாடல்கள் ரண்டக்க ரண்டக்க ரகம். ஆக்ஷன் படத்துக்கான ஃபுல் டெம்போவையும் கடத்துகிறது கணேஷ் ராஜவேலுவின் ஒளிப்பதிவு.
ரொம்ப நேரம் ஜில்லாவைச் சுற்றிக் காட்டிக்கொண்டே இருந்தால்,  கண்ணு வேர்க்காதா பாஸ்?
- விகடன் விமர்சனக்குழு