Sunday, June 2, 2013

ரஜினி சொன்ன குட்டிக் கதை



ரஜினிக்கே மிகப் பிடித்த குட்டிக் கதை!

ஒரு தாய் ஒட்டகமும் அதன் குட்டி ஒட்டகமும் பேசிக்கொண்டு இருந்தன. குட்டி மனசில் நிறைய கேள்விகள்.

‘நமக்கு ஏன் அம்மா இத்தனை நீளமான கால்கள்?’ என்றது குட்டி.

‘அதுவா மகனே, பாலைவனத்தில் மிக நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதுவும் மணல் பூமி. அதனால்தான் நமக்கு நீண்ட கால்கள் வழங்கினார் கடவுள்’ என்றது தாய் ஒட்டகம்.

‘நமக்கு ஏன் இத்தனை முரட்டு உதடுகள்? கற்கள் போல பற்கள்?’

‘அதுவா மகனே, பாலைவனத்தில் கிடைப்பதெல்லாம் முள்தாவரங்கள்தானே. அவற்றை மெல்லுவதற்கு வசதியாகக் கடவுள் செய்த ஏற்பாடு!’

‘நம் உடலில் ஏன் இத்தனை பெரிய தண்ணீர்ப் பை?’

‘அதுவா மகனே, பாலைவனத்தில் தண்ணீர் கிடையாதே. அதனால் பயணத்தில் தாகமெடுத்தால், நா வறண்டு நாம் தடுமாறக் கூடாது என்று கருணைகொண்டு கடவுள் தந்த பரிசு இது!’ என்று தாய் ஒட்டகம் பதில் சொன்னதும், ‘அதெல்லாம் சரி, பிறகு ஏனம்மா நாம் இப்படி சர்க்கஸில் இருக்கிறோம்?’ எனக் கேட்டதாம் குட்டி ஒட்டகம்.

இந்தக் கதையை ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு, ‘நாமெல்லாம் சர்க்கஸ் ஒட்டகங்கள்தானே!’ எனச் சிரிப்பது ரஜினி பாணி!

No comments:

Post a Comment