Sunday, June 2, 2013

நேரம் - விகடன் திரை விமர்சனம்


கெட்ட நேரம், நல்ல நேரம்... இரண்டுக்கும் இடையில் அல்லாடுபவனின் 'நேரம்’!
டைட்டில் ஸ்லைடில் 'தேங்க்ஸ் டு மை எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட்...எஸ்பெஷலி தி லாஸ்ட் ஒன்’ என்று திரையிடு வதில் ஆரம்பிக்கும் குறும்புச் சேட்டை இறுதிக் காட்சி வரை தடதடக்கிறது!  
ஒரு நாளின் விடியலில் ஹீரோ நிவினுக்கு கடன், காதல், சொந்தம் என அனைத்துத் தரப்பில் இருந்தும் சிக்கல்கள். அந்த நாளின் முடிவுக்குள் ஹீரோவின் நேரம் எப்படி அனைத்தையும் சரிசெய்கிறது என்பதே படம். எப்படியும் நாயகன் ஜெயிப்பார் என்றாலும், எப்படி ஜெயித்தார் என்பதை செம ஜாலி, கேலிக் கலாட்டாவாகச் சொன்ன விதத்தில் கவனிக்கவைக்கிறார் அறிமுக இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்தரன்.
கேரள இறக்குமதியான (!) அறிமுக ஹீரோ நிவின்... பதற்றம், கவலை, கோபம் என எல்லா உணர்வுகளையும் ஹீரோயிஸமே இல்லாமல் செய்து பாஸ் மார்க் வாங்கிவிடுகிறார். கொஞ்சம் சமந்தா, கொஞ்சம் காஜல் என நெஞ்சில் ஜில்ஜில் மீட்டுகிறார் அறிமுக நாயகி நஸ்ரியா நசீம். நடிப்பிலும் செம ஸ்கோர். க்யூட் ஸ்வீட் எக்ஸ்பிரஷன்களால் மனதைச் சீண்டியவரைப் பெரும் பகுதி நேரம் மறைவிடத்தில் பதுக்கிய திரைக்கதையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
'10 ஆயிரம் ரூபா போன்ங்கிற... பட்டனே இல்லே’ என்று அத்தனை ரணகளத்திலும் கிச்சுகிச்சும் சிம்ஹா, 'சின்ன வயசுல சரவணன்... இப்போ சரவணர்’ என்று தனக்குத்தானே மரியாதை கொடுத்துக்கொள்கிற தம்பி ராமையா, 'தியாகராஜ பாகவதருக்கே பாட்டு கத்துக்கொடுக்குறியா?’ என்று எகிறும் ஜான் விஜய், 'ஆவ்சம்... ஆவ்சம். கம்ப்யூட்டர் தம்பிக்கு நிறையத் தெரிஞ்சிருக்கு’ என்று கெத்து காட்டும் நாசர், பீட்டர் இங்கிலீஷ் மாணிக் எனப் படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் வசனமும் வெல் பில்ட். சரவணர், லைட் ஹவுஸ், கட்ட குஞ்சு, வட்டி ராஜா, காளான் எனக் கதாபாத்திரங்களின் விதவிதமான பெயர்கள்... ரசனை மாமே!  
சென்னை வீதிகளை அத்தனை அழகாகக் காட்டி அசரடிக்கும் ஆனந்த்.நீ சந்திரனின் ஒளிப்பதிவும் ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை யும் படத்துக்குப் படா தோஸ்த்துகள். அதிலும் அர்த்தமே இல்லாத 'பிஸ்தா’ பாடல் இளமைத் துள்ளல். அடுத்தடுத்து படையெடுக்கும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளைக் குறைத்திருக்கலாம்.
'ஹே சுருக்க ரிகா முக்கா மொழம் போட்டு மரிக்கொழுந்து கபத்துல மாட்டி பிடிச்சு பிஸ்தா சும்மா கீர சோமாரி ஜமாக்கிராயா’-வாக ஒரு படம். தியேட்டரில் இருக்கும் வரை நல்ல நேரமாக இருக்கிறது!
- விகடன் விமர்சனக் குழு

சோனா பரீயா பாடல் வரிகள் - புதிரா ? அபத்தமா ??


வெளியான ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே பட்டி தொட்டி எங்கும் ஒலிக்க தொடங்கி விட்டன மரியான் பாடல்கள். 

90 களில் கேட்ட ரஹ்மான் இசை பின் நாட்களில் கேட்க முடியாமல் போய் விட்டது என்பது ரஹ்மான் ரசிகர்களின் பரவலான கருத்தாக இருந்து வந்தது. அந்த கருத்திற்கு முற்றுப் புள்ளி வைப்பது போல மரியான் பாடல்கள் அனைத்தும் அவரது ஆரம்ப கால இசை தரத்தில் வந்துள்ளன. 

பாடல் இசை நிச்சயமாக சூப்பர் என்றாலும், வரிகள் ஏனோ புரிய மறுக்கின்றன. சோனா பரியா பாடல் வரிகளை கேட்கும் போது ஏதோ கண்டதையும் எழுதி கொட்டியது போல உள்ளது.

ஒரு வேலை திரையில் பின்னணி காட்சிகளுடன் பார்க்கும் போது புரியலாம். அப்படியும் புரியாமல் போனால் இது பாமரனுக்கு புரியாத ரகம் என்றோ இது தான் லேட்டஸ்ட் ட்ரெண்டு என்றோ நமக்கு நாமே சமாதனம் செய்து கொள்ள  வேண்டியது தான். 

சோனா பாரியா வரிகளை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களுக்காவது புரிகிறதா என்று கொஞ்சம் பாடி பாருங்கள்!


ஒஹ் யேஹ் ஓயல, எந்த நாளும் ஓயல்ல
என்ன படிச்சவன் கொடு துங்கை ஓயல (2)
ஒஹ் யேஹ் ஓயல, எங்க வேல காயல 
நீ சொக்கும்படி சிரிச்ச நீ சோனா பரியா 

சோனா பரீயா... சோனா பரியா, 

சோனா பரீயா.. தானா வாரரியா (2)

ஒஹ் யேஹ் ஓயல, எந்த நாளும் ஓயல்ல 

என்ன படிச்சவன் கொடு துங்கை ஓயல
ஒஹ் யேஹ் ஓயல, எங்க வேல காயல 
நீ சொக்கும்படி சிரிச்ச நீ சோனா பரியா 

***


பத்து காலு நண்டு பார்த்தது சோனா பரியா 

அது செத்து சுண்ணாம்பாய் போயி 
ஒத்த காலில் நிக்குதடி 

முத்துக் குளிக்கும் பீட்டரூ சோனா பரியா 

அவன் காய்ஞ்சி கருவாடா போயி 
குவாட்டருல முங்கிட்டானே.... 

அந்தரீயே சுந்தரீயே சோனா பரியா 

மந்திரியே முந்துரியே சோனா பரியா 
அந்தமெல்லாம் சிந்துரீயே சோனா பரியா 

சோனா பரீயா... சோனா பரியா, 

சோனா பரீயா.. நீ தானா வாரரியா... (2)

***


ஓயல ஓயல... சோனா பரி யாரோ... 

ஓயல... ஓயல(2)
ஓயல யல...

கண்ணுல கப்பல்... ஓயல 

நெஞ்சுல விக்கெல்லு... ஓயல 
கையில நிக்கேல்லா.. ஓயல 
உன் நடையில நக்கலா.. ஓயல 
ஓயல... ஓயல...

சிற்பிக்குள முத்து, கப்பலுல வச்சாம் 

மிச்சம் மிச்சம் வச்சோம் 
முத்த முத்த எடுத்து சிக்கி சிக்கியா 
ஹா... மதி சிக்கி கிச்சா நெஞ்சு விக்கி கிச்சா மச்ச வச்ச மிச்சம்

***
 ஒத்த மரமா எத்தன காலம் சோனா பரியா 

கடலுல போன கட்டுமரமில்ல 
இப்ப கரைதான் யேரிடுச்சே ஆமா..

அத்த மகனும் மாமன் மகனும் சோனா பரியா 

இவன போல கடலின் ஆழம் 
எவனும் கண்டதில்ல தானே..

நெஞ்சுக்குள்ள நிக்குறியே சோனா பரியா 

மீனு முள்ளா சிக்குறியே சோனா பரியா 
கெஞ்சும் படி வைக்குறியே சோனா பரியா 

சோனா பரீயா... சோனா பரியா, 

சோனா பரீயா.. நீ தானா வாரரியா... (2)

ஒஹ் யேஹ் ஓயல, எந்த நாளும் ஓயல்ல 

என்ன படிச்சவன் கொடு துங்கை ஓயல
ஒஹ் யேஹ் ஓயல, எங்க வேல காயல 
நீ சொக்கும்படி சிரிச்ச நீ சோனா பரியா 


உலகின் முதன்மை அணி இந்தியா இம்முறை சாம்பியன் ஆகுமா?



ICC சாம்பியன்ஸிப் போட்டிகள் இன்னும் 4 நாட்களில் ஆரம்பமாக உள்ளன.

ICC தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் மோதவுள்ள இந்த போட்டித் தொடரின் முதன்மை அணியாக இந்தியா இடம்பெறுகிறது.





.



ICC தர வரிசை நிலைவரம் இதோ,
  1. இந்தியா                                   - 119  புள்ளிகள்
  2. அவுஸ்திரேலியா                - 116  புள்ளிகள்
  3. இங்கிலாந்து                          - 114  புள்ளிகள்
  4. தென் ஆபிரிக்கா                  - 113  புள்ளிகள்
  5. இலங்கை                                - 108  புள்ளிகள்
  6. பாகிஸ்தான்                           - 105  புள்ளிகள்
  7. மேற்கு இந்திய தீவுகள்    -   86  புள்ளிகள்
  8. நியூசீலாந்து                          -   85  புள்ளிகள்
  9. வங்கதேசம்                           -   75  புள்ளிகள்
10. ஜிம்பாப்வே                            -   55  புள்ளிகள்
11. அயர்லாந்து                           -   39  புள்ளிகள்
12. நெதர்லாந்து                          -   14  புள்ளிகள்
13. கென்யா                                   -   11  புள்ளிகள்


இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு புதிய திருப்பங்களை ஏற்படுத்திய தோனியின் தலைமையும் IPL போட்டிகளில் இனம் காணப்பட்ட இளம் திறமைசாலிகளும் இந்த தடவையும் வெற்றி கிண்ணத்தை கைப்பற்றுவார்கள் என்று கிரிகெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.